பேஸ்புக்கில் நுழைவதற்காக பெயரை மாற்றிய பெண்

தென் கிழக்கு லண்டனை சேர்ந்த 30 வயதான ஜெம்மா ரோஜர்ஸ் பேஸ்புக்கில் 2008 ஆம் ஆண்டு கணக்கொன்றை தொடங்கினார். இதன்போது தேவையற்ற நண்பர்களின் தொல்லைகளை தவிர்க்கும் வகையில் தனது பெயருக்கு பதிலாக ஜெம்மாரொய்ட் வொன் லாலா என்ற புனைப்பெயரை பயன்படுத்தியுள்ளார்.

ஆனால், சமீபத்தில் அவருக்கு ஏற்பட்ட கணக்கினுள் நுழைவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக  பேஸ்புக் நிறுவனம் அவரின் பெயருக்கான ஆதார சான்றிதழை கேட்டுள்ளது.

தனது பிரச்சினையைக் குறிப்பிட்டு பேஸ்புக் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியபோதும் அவரது பிரச்சினைக்கு தீர்வு கிட்டவில்லை. பின்னர் போலியாக ஒரு வங்கி அட்டை பிரதியொன்றை தயாரித்து அனுப்பியுள்ளார். அது போலியான ஆவணம் என்பதை பேஸ்புக் நிறுவனம் அறிந்துக்கொண்டதால் பிரச்சினை மேலும் சிக்கலாகியது.

இதனால், வேறு வழியின்றி தனது புனைப் பெயரான ‘ஜெம்மாரொய்ட் வொன் லாலா’ என்பதையே தனது பெயராக மாற்றிக்கொண்டார். அதன் பின்னர் அப்பெயரைக்கொண்ட சாரதி அனுமதிப்பத்திரம், வங்கி அட்டை போன்றவற்றைப் பெற்று, அவற்றை பேஸ்புக் நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளார்.

துரதிஷ்டவசமாக பேஸ்புக் நிறுவனமோ, இவ்விடயம் தொடர்பாக நாங்கள் ஆராய்கிறோம் என்ற வழக்கமான பதிலையே கொடுத்துள்ளது.

தனது உண்மையான பெயரை பேஸ்புக்கிற்காக அதிகாரபூர்வமாக மாற்றிய பின்னும் தனது கணக்கில் நுழையவிடாமல் தடுப்பதன் மூலம் பேஸ்புக் நிறுவனம் முட்டாள்தனமாக நடந்துக்கொள்வதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
 


Add new comment

Or log in with...