புதிய கடற்படைத் தளபதி ஜனாதிபதியை சந்தித்தார் | தினகரன்

புதிய கடற்படைத் தளபதி ஜனாதிபதியை சந்தித்தார்

புதிய கடற்படைத்தளபதியாக தனது கடமைகளைப் பொறுப்பேற்ற வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று (14) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.

கடற்படைத் தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் அரச தலைவரைச் சந்திக்கின்ற சம்பிரதாயபூர்வத்தை நிறைவேற்றும் வகையிலேயே அவர் இவ்வாறு ஜனாதிபதியைச் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது, வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் இலங்கையின் 20 ஆவது கடற்படைத் தளபதியாக தனது கடமைகளைப் பொறுப்பேற்ற சிறப்புமிக்க நிகழ்வை ஞாபமூட்டும் வகையில், ஜனாதிபதியினால் ஞாபகச்சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
 


Add new comment

Or log in with...