எரிபொருள், கேஸ் விலை மேலும் குறையும் வாய்ப்பு | தினகரன்

எரிபொருள், கேஸ் விலை மேலும் குறையும் வாய்ப்பு

எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகளை மேலும் குறைக்கும் நோக்கில் நிதி அமைச்சிடமிருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிக்கை ஒன்றை கேட்டுள்ளார்.

உலக சந்தையில் எரிபொருட்களின் விலை வீழ்ச்சியடைந்திருப்பதால் உள்ளூரிலும் எரிபொருள் விலைகளை குறைப்பதற்கான வாய்ப்புகள் பற்றி கவனத்திற் கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக ஐ.தே.க.வின் உத்தியோகபூர்வ பேஸ்புக் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே நாளைமறுதினம் (15) முதல் அமுலாகும் வகையில் 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலையை ரூபா 100 இனால் குறைப்பதாக நிதியமைச்சு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...