மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார்

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, புகழ்பெற்ற பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் இன்று (14) அதிகாலை 4.00 மணியளவில் காலமானார்.

87 வயதான இவர் தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் என சுமார் 1,200 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.  இசையமைப்பாளர் ராமமூர்த்தி உடன் இணைந்து சுமார் 700 படங்களுக்கு இசையமைப்பில் ஈடுபட்டதோடு, தனியாக 500 படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இசையமைப்புப் பணி தவிர்ந்து காதல் மன்னன், காதலா காதலா உட்பட 10க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கேரளாவின் பாலக்காடு அருகே எலப்புள்ளி எனும் இடத்தில் 1928 ஜூன் 24ல் பிறந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் முழுப்பெயர் மனயங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன் ஆகும். 


Add new comment

Or log in with...