பெருநாளையிட்டு முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு 17ம் திகதி சம்பளம் | தினகரன்


பெருநாளையிட்டு முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு 17ம் திகதி சம்பளம்

இம்மாதம் 18ம் திகதி இடம் பெறும் நோன்பு பெருநாள் பண்டிகையை ஒட்டி சகல அரச நிறுவனங்களிலும் உள்ள இஸ்லாமிய ஊழியர்களுக்கு அவர்களின் ஜூலை மாத சம்பளத்தை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பணிப்பின் பெயரில் இம்மாதம் 17ம் திகதி வழங்குமாறு  திறைசேரி செயற்பாடுகள் திணைக்களத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உரிய அதிகாரிகள் வேண்டுகோள் விடும் பட்சத்தில் இத்திட்டத்திற்கு அரச நிறுவனங்களுக்கு நிதி வழங்கப்படுமெனவும் திறைசேரி செயற்பாடுகள் திணைக்களத்தினால் அதன் சுற்றறிக்கை இல. 4/2015 மூலம் சகல அரச நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...