முழு முகம் மூடிய ஹெல்மட் தடைக்கு இடைக்காலத் தடை நீடிப்பு | தினகரன்

முழு முகம் மூடிய ஹெல்மட் தடைக்கு இடைக்காலத் தடை நீடிப்பு

முழு முகத்தையும் மூடிய ஹெல்மட்களுக்கு பொலிஸ் திணைக்களத்தால் கொண்டுவரப்பட்ட தடைச் சுற்றறிக்கைக்கான இடைக்காலத் தடை செப்டெம்பர் 02 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இந்த இடைக்காலத்தடை நீடிக்கப்பட்டதோடு, இப்பிரச்சினை தொடர்பில் தீர்வொன்றுக்கு வருவதற்கு மேலும் கால அவகாசம் தேவையென நீதவான் தெரிவித்தார்.

கொள்ளைச் சம்பவங்கள் உட்பட பல்வேறு சட்டவிரோதச் செயல்களுக்கு துணைபுரிவதாகக் கருதி கடந்த மார்ச் 21 ஆம் திகதி அமுலாகும் வகையில் பொலிஸ் திணைக்களம் முழு முகம் மூடிய தலைக்கவசங்களுக்கு தடை விதிப்பதாக சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களின் எதிர்ப்புக் காரணமாக அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் பணிப்புரைக்கு அமைய மார்ச் 09 ஆம் திகதி மீளப் பெறப்பட்டது.

பின்னர் ஏப்ரல் 02 ஆம் திகதி அமுல்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்தபோதிலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் காரணமாக அத்தடையுத்தரவுக்கு எதிரான இடைக்காலத் தடை நீடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 


Add new comment

Or log in with...