‘டோரா’ டொபிக்கு தடை | தினகரன்

‘டோரா’ டொபிக்கு தடை

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் ‘டோரா’ டொபிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வகை டொபியை உண்ட மாணவர்கள் சுகவீனமுற்றதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
நேற்று (09) பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மேற்கொண்ட அதிரடி சுற்றிவளைப்பின்போது கொழும்பிலுள்ள இரு வர்த்தக நிலையங்களில் சுமார் 6000 டோரா டொபிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
 
மேலும் மாவட்ட ரீதியாக இவ்வகை டொபிகளை பறிமுதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட புலனாய்வு அதிகாரி பிரதீப் களுத்தரகே கூறினார்.
 
குறித்த டொபியின் மாதிரிகள் அரச பகுப்பாய்வுத் திணைக்களம் மற்றும் தேசிய அபாயகர ஓளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 
 
குறித்த ஆய்வறிக்கைகளின் முடிவினை அடுத்து உரிய தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அதிகாரசபை தெரிவித்துள்ளது.
 

Add new comment

Or log in with...