கிளிநொச்சி மக்களை விரைவில் மீள்குடியேற்ற நடவடிக்கை | தினகரன்


கிளிநொச்சி மக்களை விரைவில் மீள்குடியேற்ற நடவடிக்கை

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள் குடியேறாமல் எஞ்சியுள்ள மக்களை மீள்குடியேற்றுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீள்குடியேற்ற அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை (01) இடம்பெற்ற மீள்குடியேற்றம் தொடர்பிலான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ‘காணி, ஆவணங்கள் இல்லாதவர் களுக்கு அவற்றை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். குறிப்பிட்ட சில பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றப்படவில்லை. கண்ணி வெடி அகற்றும் பணிகளை மேற்கொண்ட அமைப்புக்களுக்கான நிதி கிடைக்காத காரணத்தினால் அந்த பணிகள் தாமதமடைந்துள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் 807 வரையான குடும்பங்களே தற்போது மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளன. இதில் கண்ணிவெடி அகற்றப் பட வேண்டிய பகுதிகளில் சற்றுத் தாமதமடைந்தாலும் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவித்து அவற்றில் மக்களை மீள்கு டியேற்ற இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள் ளனர்.கடந்த 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த இரணைதீவு மக்களையும் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற் றுவது தொடர்பாக நடவடிக்கை எடுப்போம்’ என்றார்.


Add new comment

Or log in with...