உலகிலேயே முதன் முறையாக போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கொல்கத்தாவில் ரோப் கார் வசதி | தினகரன்

உலகிலேயே முதன் முறையாக போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கொல்கத்தாவில் ரோப் கார் வசதி

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் உலகிலேயே முதன் முறை யாக ரோப் கார் வசதி அறிமுகப்படுத் தப்பட உள்ளன.
 
மாநில அரசும் கன்வேயர் அண்ட் ரோப்வே சேர்வீசஸ் என்ற தனியார் நிறுவனமும் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளன. சீல்டாவிலிருந்து பிபிடி பாக் வரையிலும் ஹவுராவிலிருந்து புதிய தலைமைச் செயலகம் அமைந்துள்ள நபன்னா வரையிலும் என 2 வழித் தடங்களில் இந்த பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து கன்வேயர் அண்ட் ரோப்வே சேர்வீசஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சேகர் சக்ரவர்த்தி கூறியதாவது:
 
சுற்றுச்சு+ழல் சீர்கெடாமலும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் புதுமையான போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பது எங்கள் கனவு திட்டம். அந்த வகையில் உலகிலேயே முதன்முறையாக கொல்கத்தாவில் ரோப் கார் வசதியை அறிமுகப்படுத்த உள்ளோம்.
 
மாநில நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் மற்றும் கொல்கத்தா பெரு நகர மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் பிர்ஹத் ஹகிம் ஆகியோ ருடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். இதுதொடர்பான திட்ட அறிக்கையை கட்டமைப்பு நிறுவனம் ஒன்று தயாரித்து வருகிறது. அவை தயார் ஆனதும் டென்டர் கோரப்படும்.
 
இந்த ரோப் கார் சேவை மின்சார த்தில் செயல்படும். ஒவ்வொரு 750 மீட்டர் இடை வெளியிலும் நிறுத்தங்கள் அமைக்கப்படும். மணிக்கு 12.5 கிமீ வேகத்தில் செல்லும் இந்தக் கார்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் 2,000 பேர் பயணிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 
அந்த நிறுவனத்தின் இயக்குநர் ரச்சனா முகர்ஜp கூறும்போது, "நெரிசல் மிகுந்த இடங்களான சீல்டா, கல்லூரி சாலை, பு+ங்கா சாலை ஆகிய இடங்களில் விரிவான ஆய்வு நடத்தி முழு திட்ட அறிக்கையை மாநில அரசிடம் ஒப்படைத்துள்ளோம்" என்றார்.

Add new comment

Or log in with...