அழகை காட்டி முதல்வர் அலுவலகத்தை ஆட்டி வைக்கிறேனா? பெண் ஐ.ஏ.எஸ். நோட்டீஸ் | தினகரன்

அழகை காட்டி முதல்வர் அலுவலகத்தை ஆட்டி வைக்கிறேனா? பெண் ஐ.ஏ.எஸ். நோட்டீஸ்

தன் அழகை காட்டி பல காரியங்களை சாதிப்பதாக தெலுங்கானா பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி குறித்து செய்தி வெளியிட்டுள்ள ஆங்கில வார இதழுக்கு அந்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி நோட்டீஸ் அனுப் பியுள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவர் சந்திர சேகரராவ் ஆட்சி நடக்கிறது. இம்மாநில முதல்வர் அலுவலகத்தின் செயலராக ஸ்மிதா சபர்வால்,37 என்ற பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி பணியாற்றி வருகிறார்.

இவரை பற்றி ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டது.

அதில் அந்த பெண் ஐ.ஏ.எஸ்.அதிகாரி தனது அழகை காட்டி பல காரியங்களை சாதித்து தலைமை செயல கத்தினை ஆட்டிபடைப்பதாகவும் ஸ்மிதா சபர்வால் நாகரீக உடையுடன் பே'ன் N'hவில் கலந்து கொள்வது போன்றும், அதனை முதல்வர் சந்திரசேகராவ் , கெமராவில் கிளிக் செய்வது போன்று கிண்டலடித்து கேலி சித்திரம் வெளியிட்டது.

அந்த அவதூறு செய்தியை மறுத்த சபர் வால், அந்த வார இதழுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில் பெண் என்பதால் தனது புகழுக்கும் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்து வகையில் ஆபாசமாக செய்தி வெளியிட்ட இதழ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

ஸ்மிதா சபர்வால் யார்?

மேற்குவங்க மாநிலம் டார்ஜpலிங்கை சேர்ந்த ஸ்மிதா சபர்வால், 2001ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பல்வேறு பொறுப்புகளை வகித்து கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆந்திராவின் கரீம்நகர் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார். 2014ம் ஆண்டு ஜ_ன் மாதம் தெலுங்கானா முதல்வர் அலுவலக தலைமை செயலராக நியமிக்கப் பட்டார்.

ஸ்மிருதி இரானி பற்றியும் அவதூறு

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பற்றியும் அந்த ஆங்கில வார இதழ் செய்தி வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...