பேஸ்புக் லோகோவில் சிறு மாற்றம் | தினகரன்

பேஸ்புக் லோகோவில் சிறு மாற்றம்

பேஸ்புக் சமூகதளம் தனது லோகோவில் கடந்த செவ்வாய்க்கிழமை மாற்றம் கொண்டுவந்துள்ளது. எனும் பெரிதாக கண்டறிய முடியாத வகையி லேயே லோகோ மாற்றப்பட்டுள்ளது.
 
எளிமையாக அணுகக்கூடிய வகையிலும் கையட க்க தொலைபேசிகளுக்கு பொருந்தும் வகையிலும் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டிருப்பதாக பேஸ்புக் குறிப்பிட்டுள்ளது. மாற்றப்பட்டிருக்கும் புதிய லோகோவிலும் நீலம் மற்றும் வெள்ளை நிறங் களே பயன்படுத்தப்பட்டுள்ளன.
 
எழுத்தின் அளவு ஏறக்குறைய ஒரே அளவாக உள்ளது. அதேவேளை மொத்த அளவு சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது. யஇ நஇ டிஇ ழ எழுத்துகள் உள்ளே இருக்கும் இடைவெளி வட்டமாக மாற்றப் பட்டுள்ளது.
 
முக்கியமாக ய முழுமையாக மாற்றப் பட்டுள்ளது. இந்த லோகோ மாற்றம் மிக நுட்ப மான முறையில் பயன்படுத்தப்பட்டதாக பேஸ்புக் கின் ஆக்கத்திறன் இயக்குனர் ஜோஷ் ஹிங்கின்ஸ் குறிப்பிட்டுள்ளார். 'நாம் எங்கிருக்கிறோம் எங்கே செல்கிறோம் என்பதை பிரதிபலிக்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது" என்று அவர் குறிப்பிட்டார்.
 
'கடந்த 2005 ஆம் ஆண்டு பேஸ்புக் லோகோ உருவாக்கப்பட்டபோது நிறுவனம் வளர்ந்துவரும் காலமாக இருந்தது.
 
நாம் வளர்ந்துவிட்டதை உணர்த்துவதாக லோகோ இருக்க வேண்டும் என்று நாம் நினைக் கிறோம்" என்றும் அவர் கூறினார்.

Add new comment

Or log in with...