ஆப்கான் பெண்ணின் கொலைக்கான மரண தண்டனை நீதிமன்றால் ரத்து | தினகரன்


ஆப்கான் பெண்ணின் கொலைக்கான மரண தண்டனை நீதிமன்றால் ரத்து

காபுல் நகரில் கடந்த மார்ச் மாதம் இளம் பெண் ஒருவர் கும்பலால் தாக்கப்பட்ட சம்ப வம் தொடர்பில் மரண தண் டனை விதிக்கப்பட்ட நால் வருக்குமான தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத்துச் செய்துள்ளது.
 
அல் குர்ஆனுக்கு தீவைத்த தாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு பார்குண்டா என்ற அந்த பெண் மீது அடக்கஸ்தலம் ஒன்றுக்கு அருகில் வைத்து கும்பல் ஒன்று கொ^ரமாக தாக்கியது. கல்லால் எறிந்து கொல்லப்பட்ட அந்த பெண்ணின் உடலின் மேலால் கார் வண்டி ஒன்று ஏற்றப்பட்டதோடு பின்னர் அவரது உடல் தீவைத்து கொளுத்தப்பட்டது.
 
இந்நிலையில் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பெண் உரிமை செயற்பாட் டாளர்கள் கடும் ஆத்திரத்தை வெளியிட்டுள்ளனர்.
 
இந்த கொலையுடன் தொடர்புபட்ட பொலிஸார் உட்பட எட்டுப் பேருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதோடு நால்வருக்கு மரண தண்டனை விதிக் கப்பட்டது.
 
இதில் பார்குண்டாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் அவர் மீது குர் ஆனை எரித்ததாக பொய் குற்றச்சாட்டு சுமத்தி வன்முறையை தூண்டிவிட்ட குறித்த அடக்கஸ்தலத்தின் காவலரும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Add new comment

Or log in with...