சவால்களுக்கு முகம் கொடுக்கவே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டேன் | தினகரன்


சவால்களுக்கு முகம் கொடுக்கவே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டேன்

நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் எந்தவித சவாலையும் வெற்றி கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித் துள்ளார்.

அந்தச் சவால்களுக்கு முகம் கொடுக்கவே தான் ஜனாதிபதி பதவிக்கு வந்ததாகவும் எந்தவித சவால்களுக்கும் சளைக்காமல் முன் செல்லும் சக்தி தமக்கு இருப்பதாகவும் அவர் கூறினார்.

மாவனல்ல, உஸ்ஸாபிடிய, அரநாயக்க ரிவிசந்த மத்திய மகா வித்தியாலயத்தில் நவீன தொழில்நுட்ப விஞ்ஞான பீடத்தை மாணவர் பாவனைக்கு ஒப்படைக்கும் வைபவத்தில் ஜனாதிபதி உரையாற்றினார்.

மாணவர்களுடனும் ஜனாதிபதி உரையாடினார். இங்கு உரையாற்றிய அவர், நாட்டில் சகல பாடசாலைகளிலும் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முக்கிய கவனம் செலுத்தப்படும். மலசல கூட வசதிகள் இல்லாத பாடசாலைகள் தொடர்பாகவும் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

பிள்ளைகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற துரித திட்டம் மேற்கொள்ளப்படும்.

தேசிய கல்வி திட்டத்தில் திறன் கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். திறன் கல்வி ஊடாக இன்று உலகில் பல நாடுகள் முன்னேற்றம் கண்டுள்ளன.

போதைப்பொருள் தொல்லையை ஒழுப்பதற்கும் சுற்றாடலைப் பாதுகாப்பதற் குமாக பாடசாலை மாணவர்களுக்கு அறிவூட்டும் நாடளாவிய வேலைத் திட்டம் எதிர்வரும் வாரங்களில் அமுல் செய்யப்படும். நாட்டுக்குத் தேவையான உணவுப் பொருட்களை எமது நாட்டிலேயே உற்பத்தி கொள்வதற்கான விசேட வேலைத்திட்டம் பொதுத் தேர்தலுக்குப் பின் ஆரம்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

முன்னாள் பிரதி அமைச்சர் லலித் திசாநாயக்க, மாகாண சபை உறுப்பினர் ஆனந்த மில்லன்கொட உட்பட பலரும் இதில் கலந்துகொண்டனர். (எப்.எம்.)


Add new comment

Or log in with...