கடந்த அரசில் ஊழலில் ஈடுபட்டோர் தேர்தலில் குதிக்க முயற்சி | தினகரன்

கடந்த அரசில் ஊழலில் ஈடுபட்டோர் தேர்தலில் குதிக்க முயற்சி

கடந்த அரசாங்கத்தில் ஊழலில் ஈடுபட்டவர்கள் மீண்டும் பொதுத் தேர்தல் மூலம் பாராளுமன்றம் செல்வதைத் தடுக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வன்னிமாவட்ட அமைப்பாளருமான ஹுனைஸ் பாரூக் கோரிக்கை விடுத்தார்.
 
கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற மோசடிகளை வெளிக் கொணரும் ‘வெளிப்படுத்தல் 07’ ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்தக் கோரிக்கையை வெலிக்கடை சிறைச்சாலை மோதல் தொடர்பாக விசாரணைகளை நடத் துவதற்கென அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்திருந்தபோதும் அந்த அறிக்கை யில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பது பற்றி இதுவரை வெளியிடப் படவில்லை.
 
உடனடியாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டவற்றை வெளியிட வேண்டும் என்றும், இந்த மோதலுடன் தொடர்புடைய நபர்களை இலங்கையின் குற்றவியல் சட்டத்துக்கு அமைய தண்டனைகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் மேற்படி அமைப்பின் ஏற்பாட்டாளர் சட்டத்தரணி சேனக பெரேரா கடிதம்மூலம் வேண்டுகோள் விடுத்தார்.
 
பிரதமரிடம் கையளிக்கப்பட்ட அறிக்கையின் பரிந்துரைக்கு அமைய வெலிக்கடை சிறைச்சாலைக்குள் நடைபெற்ற மோதலில் உயிரிழந்த வர்களுக்காக அவர்களது குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எமக்குத் தேவையானது நஷ்டஈட்டுத் தொகை அல்ல. கொலையாளிகளும் கொலைக்குப் பக்கபலமாகவிருந்த ராஜபக்ஷ ஆட்சியின் மோசடிக்காரர்களும் யார் என்பதை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும். அவர்களுக்குரிய சரியான தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்றும் சேனக பெரேரா தெரிவித்தார்.
 
எங்களுக்குத் தேவையானது நஷ்டஈடு அல்ல. இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தி உச்ச தண்டனை வழங்குவதுடன் இவ்வாறானதொரு சம்பவம் மீண்டும் நடைபெறாது என்பதற்கான ஒரு அடித்தளத்தை இடவேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கையாகும்.புதிய அரசு ஆட்சிக்கு வந்தவுடன் எங்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுங்கள் என்றுதான் கேட்டோம்.
 
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி மனித உரிமை ஆணைக்குழுவில் ஒரு முறைப்பாட்டையும் செய்து புதிய அரசுக்கும் அதனைத் தெரியப்படுத்தினோம். முன்னாள் அரசு நியமித்த விசாரணைக் குழுவை நாங்கள் நிராகரித்தோம். புதிய அரசு அதனைவிட மிக நியாயமான முறையில் நடந்துகொள்ளும் என்று நாம் நம்பினோம். இன்று அந்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை பொலிஸ்மா அதிபரிடம் நேற்றுக் கையளித்துள்ளதாக எமக்கு கிடைத் துள்ளது.
 
இந்த சம்பவத்துடன் தொடர்பு டையவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு இனியும் தாமதிக்க வேண்டாம் என நாம் அரசிடம் வினவுகின்றோம். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் இந்த சம்பவத்தை தேர்தல் கோஷமாக பயன்படுத்த வேண்டாம். ஆவணங்கள் கோவைகள் என்பவற்றை அரசியல்வாதிகள் எதிர்த்தரப்பினரை மண்டியிடச் செய்வதற்காகவே பயன்படுத்துகிறார்கள் அது எமக்குத் தேவையில்லை.
 
நஷ்டஈட்டைக் கொடுத்து இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கொடுக்கப்படுவதற்கு நாம் இணங்கப்போவதில்லை. இதில் அடங்கியுள்ள விடயங்கள் என்ன என்பதை அறிந்துகொள்வதற்காக நாம் விருப்பமாக இருக்கிறோம் என்றும் சட்டத்தரணி சேனக பெரேரா தெரிவித்தார்.
 
நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவும் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தார்.
 
இதேவேளை, வெலிக்கடை சிறைச் சாலைக்குள் மோதல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியாளர் உதேஷ் சந்திமல் என்பவர் இங்கு கருத்துத் தெரிவிக்கையில், சிறைக்குள் இருந்த கைதிகளிடம் ஆயுதங்கள், இருக்கவில்லை. கண்ணீர் புகை குண்டுகள் இருக்கவில்லை.
 
ராஜபக்ஷவின் சகாக்கள் ஆயுதங்கள் கண்ணீர்ப்புகை குண்டுகளை எடுத்துக் கொண்டு சிறைச்சாலைக்குள் வந்து சிறை கூடங்களுக்குள் கண்ணீர் புகைகளை வீசினார்கள். கைதிகளை தாக்கி அநாவசிய குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். சிறைக்கைதிகள் கீழே விழுந்து கிடக்கும் தருணத்தில் அவர்கள் அருகில் துப்பாக்கிகளை வைத்து இல்லாத கொலையாளிகளை உருவாக்கிக் காட்டினார்கள். ராஜபக்ஷ ஆட்சியில் அரசியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள இவ்வாறு அவர்கள் செய்தார்கள்.
 
இவை அனைத்தையும் நாம் எமது கண்களால் கண்டோம். இனியும் காலம் தாமதிக்காது இந்தப் படுகொலையின் பின்னணியில் உள்ள பெரும் புள்ளிகளை கைது செய்யுங்கள். நஷ்டஈடு கொடுத்து எங்களை சமாதானப்படுத்த எண்ண வேண்டாம். படுகொலைக்கு உத்தரவு பிறப்பித்த படுகொலையுடன் தொடர் புடைய அனைவருக்கும் தண்டனை வழங்குங்கள்.

Add new comment

Or log in with...