படகு விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு | தினகரன்


படகு விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு

(வைப்பக படம்)
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை களுத்துறை, கட்டுகுருந்த பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்சன யாபா தெரிவித்தார்.
 
இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
அதன் அடிப்படையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபா ஒரு இலட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூபா 20 ஆயிரமும் இழப்பீடாக வழங்குதவற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
 
குறித்த விபத்தில் 11 பேர் சடலமாக மீட்கப்பட்டதோடு, 32 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கடற்படை ஊடக பேச்சாளரான சமிந்த வலாகுலுகே தெரிவித்தார்.
 
இந்நிலையில், நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பெண் (41) ஒருவர், இன்று (21) காலை உயிரிழந்துள்ளதாக பொலிசார் அறிவித்திருந்தனர்.
 
அதன் அடிப்படையில், குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வடைந்துள்ளது.
 
 

Add new comment

Or log in with...