ஜனாதிபதியை அவமதித்த ஜோதிடருக்கு பிணை

 

வெளிநாடு செல்ல தடை

 
ஜோதிடர் விஜித ரோஹண விஜயமுனி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
 
பொதுமக்களை பிழையாக வழிநடத்தி, பொய்யான விடயங்களை வெளியிட்டமை மற்றும் ஜனாதிபதிக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் ஜோதிட கணிப்புகளை தெரிவித்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் நேற்று (31) கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அவர் இன்று கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதவான் அவருக்கு பிணை வழங்குவதற்கு அனுமதியளித்தார்.
 
ரூபா 10 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூபா ஒரு இலட்சம் கொண்ட இரு சரீரப் பிணைகளில் அவரை விடுவிப்பதாக அறிவித்த நீதவான், வெளிநாடு செல்வதற்கும் தடை விதிப்பதாகவும் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை, நேற்றைய தினம் அவர் நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். இதன்போது, அவருக்கு பிணை வழங்கப்பட்டிருந்த போதிலும், பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாமை காரணமாக மீண்டும் தடுத்து வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

Or log in with...