நீராடச் சென்ற 5 மாணவர்களில் மூவர் சடலமாக | தினகரன்


நீராடச் சென்ற 5 மாணவர்களில் மூவர் சடலமாக

 
மகாவலி கங்கையில் நீராடச் சென்ற 3 மாணவர்களின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
 
நேற்று (21) மாலை கம்பளை, துன்ஹிந்த பகுதியில் நீராடச் சென்ற 05 மாணவர்கள் இவ்வாறு நீராடச் சென்றுள்ள நிலையில், அதில் மூவர் காணாமல் போயுள்ளனர்.
 
இதனையடுத்து, கம்பளை பொலிஸார் மேற்கொண்ட விசேட விசாரணை நடவடிக்கையை அடுத்து, இராணுவ சுழியோடிகளின் உதவியுடன் இன்று காலை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையை அடுத்து, அம்மாணவர்கள் மூவரினதும் சடலங்களும் துன்ஹிந்த பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
சடலங்கள் தற்போது நானுபிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேத பரிசோதனை இன்று (22) இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
 

Add new comment

Or log in with...