கப்பலில் கொழும்பு வந்த 800kg கொக்கைன் | தினகரன்

கப்பலில் கொழும்பு வந்த 800kg கொக்கைன்

சுமார் 800 கிலோகிராம் கொக்கேன் போதைப் பொருளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மீட்டுள்ளனர்.

ஈகுவாடோர் நாட்டிலிருந்து இந்தியா நோக்கிச் சென்ற கப்பல் ஒன்றிலிருந்தே குறித்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை (09), குறித்த கப்பல், கொழும்பு துறைமுகத்திற்கு வந்தபோது பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் அது மீட்கப்பட்டுள்ளது.

குறித்த போதைப்பொருளின் மதிப்பு சுமார் ரூபா 12,000 மில்லியன் (ரூபா 1,200 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தெற்காசியாவில் மீட்கப்பட்ட மிகப்பாரிய அளவிலான கொக்கேன் போதைப்பொருள் தொகையாகும் என பொலிஸார் தெரிவித்தனர்.

 


Add new comment

Or log in with...