ஜெயலலிதா காலமானார்? மறுக்கிறது அப்பலோ (Update)

 

றிஸ்வான் சேகு முகைதீன்

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இன்னும் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும், இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் அப்பலோ மருத்துவமனை அறிவித்துள்ளது.

 


 

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா காலமானார் (Update)

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் (68) சற்று முன்னர், அப்பலோ மருத்துவ மனையில் வைத்து காலமானார் என இந்திய ஊடகங்கள் அறிவித்துள்ளன.

கடந்த செப்டெம்பர் 22 ஆம் திகதி நீர்ச்சத்து குறைவு காரணமாக திடீரென சுகவீனமுற்ற அவர் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலமானார் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


 

ஜெயலலிதா கவலைக்கிடம் - அப்பலோ

முதல்வர் ஜெயலலிதா கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக அப்பலோ மருத்துவமனை ஊடகக் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா, நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை கிரீம் சாலை அப்பலோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 22ம் திகதி அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்று ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அப்பலோ அறிக்கை வெளியிட்டிருந்தது. 

இந்நிலையில், இன்று மதியம் 1 மணியளவில் வெளியான அப்பலோவின் அறிக்கையில், ஜெயலலிதா உடல்நிலை தொடர்ந்து, மோசமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளது. 

இந்த வார்த்தை தமிழக மக்களுக்கும், குறிப்பாக அதிமுக தொண்டர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேநேரம், அவ்வறிக்கையில் ஆறுதல் அளிக்கும் ஒரு தகவலையும் அப்பலோ கூறியுள்ளது. எக்மோ உள்ளிட்ட உயிர்காக்கும் உபகரணங்கள் உதவியுடன் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது உடல்நிலை அப்பலோ மருத்துவ நிபுணர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அடுத்தடுத்த வரிகள் தெரிவிக்கின்றன.
எனவே ஜெயலலிதா உடல்நிலை, இன்னமும் சிகிச்சையை ஏற்றுக்கொண்டு உள்ளது என்பதையே இந்த வரிகள் சுட்டி காட்டுகின்றன. இது தமிழக மக்களுக்கு ஓரளவுக்கு நம்பிக்கையை தரும் வார்த்தையாகும்.

 


Add new comment

Or log in with...