அவன்கார்ட் வழக்கு; கோதா உள்ளிட்ட ஏழு பேருக்கு பயண தடை நீக்கம் | தினகரன்

அவன்கார்ட் வழக்கு; கோதா உள்ளிட்ட ஏழு பேருக்கு பயண தடை நீக்கம்

 

றிஸ்வான் சேகு முகைதீன்

அவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் கிடங்கு தொடர்பான வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட சந்தேகநபர்கள் 7 பேருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த குறித்த வழக்கு இன்று (01) கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதவான் இதனைத் தெரிவித்தார்.

இவ்வழக்கின் முக்கிய சந்தேகநபர்களாக கருதப்படும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ, அவன்கார்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் 3 முன்னாள் கடற்படை தளபதிகள் உள்ளிட்டோருக்கே இவ்வாறு வெளிநாடு செல்வதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது.

அவன்கார்ட் நிறுவனத்தின் மிதக்கும் ஆயுதக் கிடங்கை நடாத்திச் செல்வதற்கு வழங்கப்பட்ட அனுமதி காரணமாக, அரசாங்கத்திற்கு சுமார் ரூபா 11.4 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தே குறித்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...