IOC எரிபொருட்களின் விலை அதிகரிப்பு

 

றிஸ்வான் சேகு முகைதீன்

எரிபொருட்கள் சிலவற்றின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கையிலுள்ள இந்தியன் எரிபொருள் கூட்டுத்தாபனம் (IOC) அறிவித்துள்ளது.

இறக்குமதி வரி அதிகமாக உள்ளதன் காரணமாக குறித்த முடிவை எடுத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இன்று (01) முதல் இந்தியன் ஒயில் நிறுவனத்தின் எக்ஸ்ட்ரா பிரிமியம் யூரோ 3 (XTRA PREMIUM Euro 3), எக்ஸ்ட்ரா  மைல் (XTRA MILE) டீசல்களின் விலையை லீற்றர் ஒன்றிற்கு ரூபா 2 இனால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் இந்த விலை அமுலாகவுள்ளதாக ஐ.ஓ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐ.ஓ.சி. நிறுவனம் கடந்த ஜூலை மாதமளவில் சுப்பர் பெட்ரோல் மற்றும் டீசல்களின் விலையை குறைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மசகு எண்ணெய் ஏற்றுமதிக்காக நாளாந்தம் வழங்கப்படும் பீப்பாக்களின் எண்ணிக்கையை 3 இலட்சமாக குறைக்க ஐக்கிய அரபு இராச்சியம், குவைத் மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் தீர்மானித்துள்ளதாக ஒபெக் அமைப்பிலிருந்து தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

 


Add new comment

Or log in with...