ரஜினி கூட நடிக்கணும்...ஆனா ஒரு கண்டிஷன்!

 

தமிழ் சினிமாவில் இது தமன்னா சீசன். 'தர்மதுரை'க்குப் பிறகு 'தேவி', 'கத்திச்சண்டை', 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்', 'பாகுபலி 2' என திரும்பின பக்கமெல்லாம் தமன்னா! கிளாமர் டாலாக மட்டுமே அறியப்பட்ட தமன்னா, சமீப காலமாக 'எனக்கு இன்னொரு முகம் இருக்கு' என்கிற ரேஞ்சில் நடிப்பிலும் மிரட்ட ஆரம்பித்திருக்கிறார். தமன்னாவுக்குள் இருந்த நடிகையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததில் லேட்டஸ்ட் ரிலீஸ் 'தேவி'க்கு முக்கிய பங்குண்டு. 

''என் கேரியர்ல முக்கியமான, மறக்க முடியாத படம் 'தேவி'. ஒரு நடிகையா எனக்கு கிரியேட்டிவ் ஸ்பேஸ் கொடுத்த படம். கமர்ஷியலாகவும் சக்சஸ். மறுபடி இப்படியொரு மூணு மொழிப் படங்கள்ல நடிப்பேனானு தெரியலை. ரொம்ப பாசிட்டிவான விமர்சனங்கள் வந்தது. சந்தோஷமா இருக்கேன்....''

'தர்மதுரை'யில் தமன்னாவுக்கு டைவர்ஸி, லிவிங் டுகெதர் கேரக்டர்.... எப்படி சம்மதித்தார்?

அந்த கேரக்டர் ரொம்ப யதார்த்தமானது. பொதுவா இந்தியன் சினிமாவுல முதல் பார்வையிலயே காதல்ல விழற மாதிரியான கேரக்டர்களோட சித்தரிப்பு அவ்வளவு சரியா இருக்காது. ஆனா தர்மதுரையில அதை ரொம்ப அழகா, இயல்பா சித்தரிச்சிருப்பார் டைரக்டர். விமன் எம்பவர்மென்ட்ல ரொம்ப அழுத்தமான நம்பிக்கை கொண்டவள் நான். அதனால இந்த கேரக்டரை பத்தி சொன்னதுமே யெஸ் சொல்லிட்டேன். சந்தோஷமா வாழற உரிமை பெண்களுக்கும் உண்டுனு  சோஷியல் மெசேஜ் சொன்ன இந்தப் படமும், கேரக்டரும்கூட எனக்கு ஸ்பெஷல்தான்.''

வெள்ளாவியில் வச்சு வெளுத்தது போல ஒரு கலர்... தமன்னா கலர் என ஒப்பிடுகிற அளவுக்கு அவரது நிறம் அத்தனை ஃபேமஸ்... தமன்னாவுக்கு அதில் பெருமையா?

'அது அம்மா&அப்பா கொடுத்த கிஃப்ட். கலரை நினைச்சு நான் என்னிக்கும் பெருமைப்பட்டதும் இல்லை. பெருமையா சொல்லிக்கிற அடையாளம் இல்லைங்கிறது என் எண்ணம். 'பாகுபலி 1'ல போர் வீராங்கனை கேரக்டருக்காக கொஞ்சம் கறுப்பு கலர் மேக்கப்லதான் நடிச்சேன். 

தேவி' படத்துல என்னோட கலரை 10 ஷேடு கம்மியாக்கித்தான் நடிச்சிருப்பேன்.  படத்துல என் கேரக்டருக்கு கலர் செட் ஆகாதபோது, அதை மாத்திக்கிட்டுதான் நடிக்க வேண்டியிருக்கு. என் கலரை பாராட்டறதா சொல்றீங்க... விஷால், சூரினு என் கலரை வச்சு என்னைப் பயங்கரமா கலாய்ச்சவங்கதான் அதிகம்.ஸ்கின் கலருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறதை நான் என்னிக்குமே என்கரேஜ் பண்றதில்லை.''

'தர்மதுரை' பிரமோஷனுக்கு வரலைனு உங்க மேல கம்ப்ளெயின்ட் கொடுத்ததா சொல்றாங்க... அதே நேரம் 'தேவி' பட பிரமோஷனுக்காக பிரபுதேவாகூட கோல்டன் டெம்பிள் வரைக்கும் பிரார்த்தனை பண்ணப் போனீங்க... என்ன நடக்குது?

'தமன்னாவை பத்தி எழுத எதுவும் நியூஸ் இல்லைனா, இப்படி எதையாவது கற்பனை பண்ணி மசாலா சேர்த்து கிளப்பி விட்டுடறாங்க.  புரமோஷன்ங்கிறது அந்தப் படத்துல ஒரு பார்ட்டுனு எனக்குத் தெரியாதா என்ன? 'தர்மதுரை' புரமோஷனுக்கு நான் கோ ஆப்பரேட் பண்ணலைனு சொல்றது சுத்தப் பொய். நீங்க சொல்ற மாதிரி புரடியூசர் சைடுலேருந்து எந்தப் புகாரும் கொடுக்கப்படலை.
'தேவி'யோட ஹிந்தி யூனிட்ல எல்லாரும் கோல்டன் டெம்பிள் போகணும்னு ஆசைப்பட்டாங்க. அவங்ககூட நானும் போனேன். ''

ரஜினி கூட நடிக்கிறதுதான் பலரது விருப்பமா இருக்கும். உங்களுக்கு ?

தாஜ்மகால் பிடிக்காதவங்க யாராவது இருப்பாங்களா? ரஜினி சார் கூட நடிக்கிறதும் அப்படித்தான். நான் ரெடி. ஆனா  ஒரு கண்டிஷன். ஹீரோயினா மட்டும்தான் நடிப்பேன்.''

ஒரு பக்கம் பாகுபலி மாதிரி பிரமாண்ட பிராஜக்ட்.... இன்னொரு பக்கம் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம்.... பணத்துக்காக நடிகைகள் யார்கூட வேணா நடிப்பாங்கனு கலாய்க்கிறது தெரியுமா?

'எல்லாருக்கும் வாழ்க்கையில பணம் முக்கியம்தானே...?-பணத்துக்காக வேலை பார்க்கிறதுல என்ன தப்பிருக்கு? இப்படிக் கலாய்க்கிற எல்லாருமே அந்தக் கடையில பொருட்கள் வாங்கினவங்களாதான் இருப்பாங்க. அது ஒரு பிரபலமான பிராண்ட். அதுல நான் நடிக்கலை. அந்த பிராண்டை என்டார்ஸ் பண்ணினேன். அவ்வளவுதான். நான்சென்ஸான கமெண்ட்ஸுக்கு விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

கல்யாணம் எப்போ?

''விஷால் கூட 'கத்திச் சண்டை', சிம்புகூட 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்', 'பாகுபலி 2'னு மறுபடி தமிழ்ல பிசியாகியிருக்கேன். கல்யாணத்தைப் பத்தி யோசிக்கக்கூட நேரமில்லை.


Add new comment

Or log in with...