ரூ. 32 இலட்சம் சிகரட்டுகளுடன் மனைவி குழந்தையுடன் நபர் கைது

 

ரூபா 32 இலட்சம் பெறுமதியான சிகரட் பொதிகளுடன் இலங்கையைச் சேர்ந்த குடும்பத்தினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (17) அதிகாலை ஐக்கிர அரபு இராச்சியத்தின் துபாய் விமானநிலையத்திலிருந்து இலங்கை வந்த மனைவி, பிள்ளையுடன் குறித்த பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களனி பிரதேசத்தைச் சேர்ந்த களனியைச் சேரந்த இவர், துபாயில் மோட்டார் திருத்துபவராக கடமைபுரிந்து வந்துள்ளார்.

குறித்த மூன்று சந்தேகநபர்களும் தங்களது 06 பயணப்பையினுள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் குறித்த சிகரட்டுகளை கொண்டு வர முயற்சி செய்துள்ள நிலையில், சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது, சிகரட்டின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால், இவ்வாறு வெளிநாட்டிலிருந்து சிகரட்டுகளை கொண்டு வருவோர் அதிகரித்துள்ளதாக விமானநிலைய பிரதி சுங்க பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க தெரிவித்தார்.

சட்டவிரோதமான முறையில், சிகரட் கார்டன் ஒன்றை நாட்டிற்குள் கொண்டு வருபவருக்கு, கடத்தல்காரர்களால் ரூபா 20 ஆயிரம் வரை வழங்கப்படுவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த நடவடிக்கை தொடர்பில் தாங்கள் மிகவும் அவதானமாக கண்காணித்து வருவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.


Add new comment

Or log in with...