ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் கன்னி ஊடக சந்திப்பு; ஜீ.எல் உடன் பசில் | தினகரன்

ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் கன்னி ஊடக சந்திப்பு; ஜீ.எல் உடன் பசில்

 

றிஸ்வான் சேகு முகைதீன்

ஜீ.எல். பீரிஸ் தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் முதலாவது ஊடகச் சந்திப்பு இன்று இடம்பெற்றது.

பத்தரமுல்லையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் கட்சி காரியாலயத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மலர் மொட்டு சின்னத்தைக் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு தலைவராக முன்னாள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் செயற்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பில் அக்கட்சியின் தலைவர் ஜீ.எல். பிரிஸ் கலந்து கொண்டிருந்தார் என்பதோடு, கட்சியின் முதலாவது உறுப்புரிமையை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்போது கருத்து தெரிவித்து அக்கட்சியின் தலைவர் ஜீ.எல். பீரிஸ், தமது கட்சியில், முதல் கட்டமாக 100 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உறுப்புரிமைய அட்டைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தங்களது கட்சியின் உறுப்புரிமை வழங்கும் நடவடிக்கை, நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டதாக பசில் ராஜபக்‌ஷ  தெரிவித்தார்.

 


Add new comment

Or log in with...