நீர் கட்டணம் அதிகரிப்பு; நிலையான கட்டணம் ரூபா 250

 

றிஸ்வான் சேகு முகைதீன்

எதிர்வரும் டிசம்பர் 01ஆம் திகதி முதல் நீர் கட்டணங்களை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

ஆயினும் சமூர்த்தி பயனர்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள், பாடசாலைகள் போன்றவற்றிற்கு இவ்வதிகரிப்பு மேற்கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு அலகு நீரை சுத்திகரிப்பதற்கு ஆகின்ற செலவை ஈடுசெய்யும் நோக்கிலேயே இந்த கட்டண அதிகரிப்பை மேற்கொள்ளப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைர்வர் கே.ஏ. அன்சார் சுட்டிக்காட்டினார்.

குறித்த அதிகரிப்பு சராசரியாக 30 சதவீத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெரிவித்த  நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ. அன்சார்..

0 தொடக்கம் 5 வரையான நீர் அலகுகளுக்கான அறவீடு ரூபா 8 இலிருந்து ரூபா 16 ஆகவும், 16 தொடக்கம் 20 அலகுகளுக்கான அறவீடு ரூபா 40 இலிருந்து ரூபா 52 ஆக அதிகரிக்கப்படவுள்ளது. 

மாதாந்த சேவை கட்டணம் ரூபா 50 இலிருந்து ரூபா 250 ஆக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

உத்தேசிக்கப்பட்ட அதிகரிப்பு

அலகு    அதிகரிப்பு

0 - 5 -  ரூபா 16.00
16 -20 -   ரூபா 52.00

மாதாந்த நிலையான கட்டணம்

ரூபா 250.00 

 


Add new comment

Or log in with...