50 அடி பள்ளம்; மயிரிழையில் தப்பிய பேராபத்து

 

றிஸ்வான் சேகு முகைதீன்

சுமார் 50 அடி உயரத்திலுள்ள பாதையில், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மொரவக - கொழும்பு வீதியில், நெலுவ சந்திக்கு அருகிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இன்று (11) அதிகாலை, தேயிலைத் தூள் போக்குவரத்தை நிறைவு செய்து, பிட்டபெத்தர பிரதேசத்திலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட குறித்த லொறியின் 'பிரேக்' செயலிழந்த நிலையில், சாரதியின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி பாதையில் புரண்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த சாரதி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, உதவியாளர் ஹினிதும வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக நெலுவ பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், பனிமூட்டமான நிலையில், குறித்த பாதைக்கு அருகில் சுமார் 50 அடி பள்ளத்தில் வீழ்வதிலிருந்து குறித்த லொறி மீண்டதன் மூலம் பேராபத்து தடுக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, குறித்த லொறி முழு வீதியையும் மூடியவாறு அதன் குறுக்கே புரண்டதை அடுத்து சுமார் 10 மணி நேரம் வாகன போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(படங்கள்: ரவீந்திர லியனகே)

 


Add new comment

Or log in with...