அமெரிக்க மக்களின் தெரிவு; ட்ரம்ப் 45 ஆவது ஜனாதிபதி (Update)

அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவாகியுள்ளார். 

அமெரிக்காவிலுள்ள 538 மாநிலங்களில் 276 மாநிலங்களை வெற்றி கொண்டதன் மூலம், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் இந்த வெற்றியை தனதாக்கியுள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதியான பராக் ஒபாமாவின் கட்சி சார்பில் போட்டியிட்டவருமான ஹிலாரி கிளின்டன் 218 ஆசனங்களை மாத்திரமே பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அமெரிக்காவின் 538 மாநிலங்களில் 270 மாநிலங்களை வெற்றி கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 51 ஆசனங்களைப் பெற்ற குடியரசுக் கட்சி செனற் சபையை தங்களது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்துள்ளதோடு (ஆகக் குறைந்த பெரும்பான்மை - 51 ஆசனங்கள்), 236 ஆசனங்களை கைப்பற்றி (ஆகக் குறைந்த பெரும்பான்மை - 270 ஆசனங்கள்) அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் (US House) அதிகாரத்தையும் ட்ரம்பின் குடியரசுக் கட்சி தனதாக்கியுள்ளது. 

 

 


 

ட்ரம்ப் வெற்றியை நோக்கி

அமெரிக்காவின் 45வது ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இலங்கை நேரத்தின்படி நேற்று (08) மாலையில் தொடங்கிய வாக்குப்பதிவு, இன்று காலை வரை இடம்பெற்றது.

இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன், குடியரசுக் கட்சியின் வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

538 மாநில பிரநிதிகளில் குறைந்தது 270 பிரநிதிகளை பெறும் கட்சி வேட்பாளர் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவார்.

தற்போது வரை, டொனால்ட் ட்ரம்ப் 244 மாநிலங்களை பெற்று முன்னிலை வகிக்கிறார். ஹிலாரி கிளின்டன் 215 மாநிலங்களை கைப்பற்றியுள்ளார்.

இந்நிலையில் ட்ரம்பிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை 218 ஆசனங்களைப் பெறும் கட்சி அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் (US House) அதிகாரத்தை கைப்பற்றும் எனும் நிலையில், ட்ரம்பின் குடியரசுக் கட்சி இது வரை 224 ஆசனங்களை கைப்பற்றி அதன் அதிகாரத்தை உறுதி செய்துள்ளது. 

ஹிலாரியின் ஜனநாயக கட்சி இது வரை 166 ஆசனங்களை மாத்திரமே பெற்றுள்ளது.

 


Add new comment

Or log in with...