கிளிநொச்சி சுண்டிக்குளத்தில் 112 கிலோ கேரள கஞ்சா மீட்பு

 

கிளிநொச்சி சுண்டிக்குளம் கடற்கரை பகுதியில் சுமார் 112 கிலோ கேரள கஞ்சா தர்மபுரம் பொலீஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று (07) அதிகாலை 6.00 மணியளவில்  சுண்டிக்குளம் கடல் மார்க்கமாக கஞ்சா  கொண்டுவரப்படுவதாக தா்மபுரம்  பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கிளிநொச்சி முல்லைத்தீவு  பிராந்திய பிரதி பொலிஸ் மாஅதிபா் மகேஸ் வெலிகண்ணவின் வழிகாட்டலில் தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம். சத்துரங்க தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினால் மேற்படி கேரள கஞ்சாவை கைப்பற்றப்பட்டுள்ளது.

சுண்டிக்குளம் கடற்கரை பகுதிக்கு பொலிஸ் குழுவினர் வருவதை அவதானித்த கடத்தல்காரர்கள் படகில் கஞ்சாவை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனா். 
இதேவேளை மோட்டார்சைக்கிளில் சுமார் நாற்பது கிலோ வரையான கஞ்சா பொதியை எடுத்துக்கொண்டு தப்பிச்செல்ல முற்பட்ட இருவரை கடற்படையினா் சுற்றி வளைத்த நிலையில் அவா்களும் கஞ்சா பொதியை  வீசி விட்டு தப்பிச் சென்றுவிட்டனா்.

இதன் போது மீட்கப்பட்ட 40 கிலோ  வரையான கஞ்சாவும், கடற்படையினரால்  விசேட அதிரடிப்படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது  இதேவேளை  பொலீஸாரால் மீட்கப்பட்ட 72 கிலோ கஞ்சாவுமாக சுமார் 112 கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை தா்ரமபுரம் பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனா். விரைவில் சந்தேகநபா்களும் கைது செய்யப்படுவா் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனா்.

(கிளிநொச்சி குறூப நிருபா் - எம். தமிழ்செல்வன்)

 


Add new comment

Or log in with...