பால்மா விலை அதிகரிக்கப்படாது | தினகரன்

பால்மா விலை அதிகரிக்கப்படாது

 

இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கு வற் வரி அறவிடப்பட்டாலும் பால்மாவின் விலை எவ்வகையிலும் அதிகரிக்கப்படமாட்டாதென நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அறிவித்துள்ளார்.

நவம்பர் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய வற் வரியினூடாக இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கும் இந்த வரி உட்படுத்தப்படுகிறது. எனினும் தற்போது பால்மா வகைகளுக்கு உச்ச சில்லறை விலை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. எனவே இறக்குமதி செய்யும் பால்மாவுக்கு அனுமதியின்றி விலையை அதிகரிக்க முடியாது.

புதிதாக அறவிடப்படும் இந்த வற் வரி ஊடாக பால்மாவின் விலையை அதிகரிக்கவோ அல்லது அந்த வரியை நீக்குவது தொடர்பாகவோ நிதியமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அந்த நிறுவனங்கள் ஆயத்தமாக இருப்பதாக அறிவித்துள்ளன.

பால் மா இறக்குமதியாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளில் உண்மைத் தன்மை இருக்குமேயானால் அது தொடர்பாக ஆராய்ந்து அவர்களுக்கு வேறு விதமான ஒரு நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்கவும் நிதி அமைச்சு நடவடிக்கை எடுக்கும். எவ்வாறாயினும் தற்போது சந்தையில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை விதித்துள்ள விலைக்கட்டுப்பாட்டின் படி 400 கிராம் பால்மாவின் விலை 325 ரூபாவாகவும் ஒரு கிலோ பால்மாவின் விலை 810 ரூபாவாகவும் விற்கப்படவேண்டும். இந்த விலையில் எந்தவித மாற்றங்களும் இல்லையென்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். 


Add new comment

Or log in with...