ஒரு வார துக்க தினம்; அரச மரியாதையுடன் இறுதிக் கிரியை (Update) | தினகரன்

ஒரு வார துக்க தினம்; அரச மரியாதையுடன் இறுதிக் கிரியை (Update)

 

றிஸ்வான் சேகு முகைதீன்

காலம் சென்ற பண்டித் அமரதேவவின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம் (05) இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் அவரது மறைவு தொடர்பில், ஒரு வார கால துக்க தினம் பிரகடனப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

இதேவேளை, அவரது விருப்பத்தின்படி, இறுதிக் கிரியைகளை அடுத்து அவரது உடல் கொழும்பு வைத்திய பீடத்திற்கு ஒப்படைக்கப்படவுள்ளதாக அவரது உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

அவரது உடல், நாளை (04) காலை 10.00 மணி முதல் நாளை மறுதினம் (05) பிற்பகல் 3.00 மணி வரை சுதந்திர சதுக்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதனை அடுத்து, பூரண அரச மரியாதையுடன் இறுதிக் கிரியைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 


 

பிரபல இசைக்கலைஞர் பண்டித் அமரதேவ காலமானார் (Update) (11.47 am)

மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பேராசிரியர் பண்டித் அமரதேவ சற்று முன்னர் ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் மரணமடைந்தார்.

கடந்த 2001 ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸின் ரமோன் மக்சேசே விருது பெற்ற இவர் 2002 ஆம் ஆண்டு பத்ம ஶ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

விமலா அமரதேவவை திருமணம் முடித்த இவர், ரஞ்சனா அமரதேவ, சுபானி அமரதேவ, பிரியன்வத அமரதேவ ஆகிய மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

விருதுகள்
1986 - கலா கீர்த்தி
1998 - தேசமான்ய

2001 - ரமோன் மக்சேசே (பிலிப்பைன்ஸ்_
2002 - பத்ம ஶ்ரீ
2003 - பிரான்ஸ் அரசின் கௌரவ விருது

 


 

பண்டித் அமரதேவ தீவிர சிகிச்சை பிரிவில் (09:41 am)

 

பிரபல சிங்கள இசைக் கலைஞர் பேராசிரியர் பண்டித் அமரதேவ (88) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக, அவர் ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2001 ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸின் ரமோன் மக்சேசே விருது பெற்ற இவர் 2002 ஆம் ஆண்டு பத்ம ஶ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

 


Add new comment

Or log in with...