கௌதமி கமல் பிரிவு; முடிவுக்கு வந்த ..... காதல் | தினகரன்

கௌதமி கமல் பிரிவு; முடிவுக்கு வந்த ..... காதல்

 

நடிகர் கமல்ஹாசனை பிரிவதாக நடிகை கௌதமி அறிவித்துள்ளார். 13 ஆண்டு காலமாக ஒன்றாக வாழ்ந்து வந்த அவர்களின் வாழ்க்கையில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக தனது டுவிற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை கௌதமி, கடந்த 13 வருடங்களாக மகிழ்ச்சியாகவும், மனநிறைவுடனும் வாழ்ந்ததாகவும், தற்போது பிரிவதற்காக எடுக்கப்பட்ட முடிவு மிகவும் சிரமமானது. இந்த முடிவை திடீரென எடுக்க முடியவில்லை. மகளின் எதிர்காலம் கருதி இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

குறை கூறுவதோ, அனுதாபம் தேடுவதோ எனது நோக்கம் அல்ல. மாற்றம் என்பதை நாம் ஒன்றும் செய்ய முடியாது என்பதை எனது வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்டு இருக்கிறேன். ஒவ்வொருவருக்கும், மனித மனம், மாற்றத்தை தந்தே தீரும். எல்லா மாற்றங்களையும், நாம் எதிர்பார்ப்பதில்லை. எந்தவொரு பெண்ணும், அவர் வாழ்நாளில் எடுக்கக்கூடிய கடினமான முடிவு இதுதான். ஆனால், எனக்கு இது தேவையாக இருந்தது. நான் முதலில் ஒரு தாய், எனது மகளுக்கு சிறந்த தாயாக இருக்க விரும்புகிறேன். அதில் நான் சிறப்பாக செயல்பட, நான் முதலில் மன அமைதியுடன் இருக்க வேண்டும்.

இருவரும் வெவ்வேறு பாதைகளில் பயணிப்பதால் இதற்கு மேல் இணைந்து வாழ்வதில் அர்த்தமில்லை. கடந்த இரண்டு வருடங்களாகவே இந்த மனநிலையில் தான் இருந்து வந்தேன். என் வாழ்க்கையில் எடுத்த மிகக் கடுமையான முடிவு இது. நான் தொடர்ந்து கமல்ஹாசனின் இரசிகையாக தொடர்வேன். அனைத்துக்கும் மேலாக ஒரு தாயாக நான் இருக்க வேண்டிய தருணம் இது.

அவர் வாழ்க்கையின் பல்வேறு கடினமான தருணங்களில் நான் உடன் இருந்து இருக்கிறேன். அதில் பல அற்புத தருணங்களும் அடங்கும். அவர் படங்களில் உடை வடிவமைப்பாளராக பணியாற்றியபோது பல்வேறு விஷயங்களை கற்று இருக்கிறேன். அவரது படங்களுக்கு, நான் நியாயம் செய்து இருக்கிறேன் என நம்புகிறேன். அவரது ரசிகர்களுக்காக இன்னும், பல விஷயங்களை அவர் செய்ய இருக்கிறார். அந்த வெற்றிகளுக்காக பாராட்ட, நானும் காத்திருக்கிறேன் " என்று கூறியுள்ளார்.

 


Add new comment

Or log in with...