பிரதியமைச்சர் சரத் குமாரவின் விளக்கமறியல் நீடிப்பு | தினகரன்

பிரதியமைச்சர் சரத் குமாரவின் விளக்கமறியல் நீடிப்பு

 

றிஸ்வான் சேகு முகைதீன்

முன்னாள் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்னவை எதிர்வரும் நவம்பர் 08 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவர் இன்று (01) நீர்கொழும்பு மேலதிக நீதவான் கபில துஷ்மந்த எப்பிட்டவல முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதி நீர்கொழும்பு தில்நந்து பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த ஒக்டோபர் 24 ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவருக்கு இன்று (01) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...