ஒரு கோடி ரூபா கஞ்சாவுடன் நால்வர் கைது

 

யாழ். கரைநகர் கடற்பரப்பில் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான கஞ்சா பொதிகள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன் 4 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் கேரளாவிலிருந்து படகு மூலம் கொண்டுவரப்பட்ட 75 கிலோ கஞ்சாவினை காரைநகர் கடற்கரைப்பகுதியில் படகொன்றில் ஏற்றிக்கொண்டிருந்த வேளையில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போதே குறித்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நால்வரில் இருவர் யாழ். வேலணைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, ஏனைய இருவரில் ஒருவர் மன்னாரைச் சேர்ந்த மீனவர் என்பதோடு, மற்றையவர் யாழ். சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்தராவார்.

சுமார் ஒரு கோடிக்கு ரூபாவிற்கு மேற்பட்ட பெறுமதி கொண்ட கஞ்சா பொதிகளை மீட்ட விசேட அதிரடிப்படையினர் கைது செய்த நால்வரையும் மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளையும் ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த நால்ரையும் ஊர்காவற்துறை பொலிஸார் ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.  

(யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)

 


Add new comment

Or log in with...