தாய்லாந்து மன்னருக்கு ஜனாதிபதி இறுதி மரியாதை | தினகரன்

தாய்லாந்து மன்னருக்கு ஜனாதிபதி இறுதி மரியாதை

 

தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யாதே பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று (30) தாய்லாந்து பயணமானார்.

மன்னரின் பூதவுடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தி தனது இறுதி மரியாதையை தெரிவித்துக்கொண்ட ஜனாதிபதி, விசேட விருந்தினர்களுக்கான புத்தகத்திலும் நினைவுக் குறிப்பொன்றை பதிவு செய்தார்.

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, தாய்லாந்து நாட்டின் இலங்கை தூதுவர் ஷெனுக்கா செனவிரத்ன ஆகியோரும் ஜனாதிபதியுடன் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.

தாயலாந்து மன்னரின் பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தியதன் பின்னர் ஜனாதிபதி நேற்று இரவு நாடு திரும்பினார்.

எழுபது ஆண்டுகள் தாய்லாந்து நாட்டின் அரசராக இருந்த மன்னர் பூமி போல் கடந்த 13ஆம் திகதி மரணமானார். அவரது மரணத்தை முன்னிட்டு தாய்லாந்து அரசாங்கம் 100 நாட்கள் துக்க தினம் பிரகடனப்படுத்தியுள்ளது.

உலகின் பல பாகங்களிலிருந்தும் அரச தலைவர்கள் தாய்லாந்து வந்து மன்னரின் பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

 


Add new comment

Or log in with...