நவம்பர் 01 முதல் 15% வற் வரி அமுல் (இவற்றுக்கு விலக்கு) | தினகரன்

நவம்பர் 01 முதல் 15% வற் வரி அமுல் (இவற்றுக்கு விலக்கு)

 

றிஸ்வான் சேகு முகைதீன்

பொருட்கள் சேவைகள் தொடர்பான மேலதிக பெறுமதி சேர் வரி (VAT) தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை அடுத்து, திருத்தப்பட்ட வரி எதிர்வரும் நவம்பர் 01 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

நேற்றைய தினம் (26) பாராளுமன்றத்தில் இது தொடர்பான திருத்தச் சட்டமூலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் அடிப்படையில் 11% ஆக இருந்த வற் வரி, 15 % ஆக அதிகரிக்கப்படவுள்ளது.

குறித்த வரி அறவீட்டில், மொத்த மற்றும் சில்லறை வியாபாரம் தொடர்பான வற் பதிவு தொடர்பான எல்லை மாதாந்தம் ரூபா 12.5 மில்லியன் அல்லது வருடாந்தம் ரூபா 50 மில்லியன் ஆகும்.

மேலும், பால்மா, மின் உபகரணங்கள், வாசனை திரவியங்கள், ஆபரணங்கள் மற்றும் சிகரட், மதுபானம், தொலைத் தொடர்பு சேவை ஆகியவற்றிற்கு வற் வரியில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுகாதாரத்துறை, வீடமைப்புத் துறை மற்றும் ஸ்மார்ட் போன்கள் என்பன வற் வரி அறவீட்டிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று (26) பாராளுமன்றத்தில் அறிவித்தார். 

காதார சேவையில் வெளிநோயளார் மருத்துவக் கட்டணம், நோயை நிச்சயம் செய்வதற்கான சோதனை, மருத்துவ பரிசோதனைகள், சத்திரசிகிச்சை மற்றும் குருதிமாற்று சிகிச்சை உள்ளிட்டவற்றுக்கு “வற் “வரி அறவிடப்படவிருப்பதாக பிழையாக கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும், மக்களின் நன்மையைகருத்தில் கொண்டு வற் வரியிலிருந்து இவை நீக்கப்பட்டுள்ளன எனவும் அமைச்சர் நேற்று தெரிவித்திருந்தார்.

ஆயினும் விசேட மருத்துவ நிபுணருக்கான கட்டணம், மருத்துவமனை அறைக்கான கட்டணம் ஆகியன வற் வரியில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

எனினும் வீடு விற்பனை, பெற்றோல், டீசல், போக்வரத்து சேகைள் தொடர்பில் வற் வரி விலக்களிக்கப்பட்டுள்ளது. 

மேலும் 2% ஆக இருந்த தேசத்தை கட்டியெழுப்பும் வரியில் (NBT) எவ்விதமான மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

விலக்களிக்கப்பட்டவை வருமாறு 

 1. கோதுமை
 2. கோதுமை மா
 3. அரிசி
 4. சீனி
 5. பருப்பு
 6. உப்பிடப்பட்ட மீன்
 7. டின் மீன்
 8. மாசி
 9. மிளகாய் தூள்
 10. பாண்
 11. பால்
 12. தேயிலை
 13. இறப்பர்
 14. தேங்காய்
 15. தேங்காய் எண்ணெய்
 16. தேங்காய் பால்
 17. முட்டை
 18. இறால்
 19. பழங்கள்
 20. மரக்கறிகள்
 21. உருளைக்கிழங்கு
 22. கருவாடு
 23. வெங்காயம்
 24. பெரிய வெங்காயம்
 25. பூண்டு
 26. பாசிப்பயறு
 27. மிளகாய்
 28. கௌபி
 29. கடலை
 30. உளுந்து
 31. கொத்தமல்லி
 32. வேர்கடலை
 33. உரம்
 34. மருந்துகள்
 35. மருத்துவ உபகரணங்கள்
 36. மருத்துவ பயன்பாட்டு உபகரணங்கள்
 37. மருத்துவ தொகுதிகள்
 38. ஆயுர்வேத பொருட்கள்
 39. சக்கர நாற்காலிகள்
 40. கைபிடி
 41. கேட்டல் உபகரணம்
 42. வெள்ளை பிரம்புகள்
 43. Brail இயந்திரங்கள்
 44. Brail கடதாசிகள்
 45. மூக்குக்கண்ணாடி பிரேம்கள்
 46. மூக்குக் கண்ணாடி செய்ய பயன்படுத்தப்படும் பொருட்கள்
 47. வெளிநோயாளர் சேவை
 48. ஸ்கேனிங் சேவைகள்
 49. மருத்துவ சோதனைகள்
 50. சத்திரசிகிச்சை சேவைகள்
 51. டீசல்
 52. போக்குவரத்து சேவைகள்
 53. மண்ணெண்ணெய்
 54. பெட்ரோல்
 55. விமான எரிபொருள்
 56. உற்பத்தி வரி கொண்ட வாகனங்கள்
 57. பவுசர்கள் (Bowsers)
 58. விவசாய விதைகள்
 59. செடிகள்
 60. விவசாய இயந்திரங்கள்
 61. டிராக்டர்
 62. நெல் அறுவடை இயந்திரங்கள்
 63. பேக்கரி தயாரிப்பு இயந்திரங்கள் உற்பத்தி
 64. பால் உற்பத்தி இயந்திரங்கள்
 65. மீன்வள உபகரணங்கள்
 66. தாவர பச்சை வீட்டுத் தொகுதி
 67. கட்டடம் உபகரணங்கள்
 68. மின்சாரம்
 69. சூரிய மின் உற்பத்தி உபகரணங்கள்
 70. மின்சக்தி திறன் கொண்ட மின்குமிழ்கள்
 71. மின்சக்தி திறன் கொண்ட மின்குமிழ்கள் உற்பத்தி செய்யும் உபகரணங்கள்
 72. கல்வி சேவைகள்
 73. நூலக சேவைகள்
 74. கணனி மற்றும் பாகங்கள்
 75. கணினிகள் மற்றும் மென்பொருட்கள்
 76. அச்சிடப்பட்ட புத்தகங்கள்
 77. விளையாட்டு உபகரணங்கள்
 78. ஆயுள் காப்பீடு
 79. கையடக்க தொலைபேசிகள்
 80. இரத்தினங்கள், முத்து மற்றும் வைரம்
 81. தங்கம் மற்றும் பிளாட்டினம்
 82. காணி விற்பனை

Add new comment

Or log in with...