'வற் வரி' அறவீட்டிலிருந்து மேலும் விலக்களிப்பு | தினகரன்

'வற் வரி' அறவீட்டிலிருந்து மேலும் விலக்களிப்பு

 

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் சுடப்பட்ட இடத்தில் இருந்து 150 மீற்றர் தூரத்தில் துப்பாக்கி ரவையின் வெற்றுக்கோது ஒன்று யாழ்ப்பாணம் சொகோ பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் வைத்து கடந்த 20 ஆம்திகதி சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தின் பின்னர் கைதுசெய்யப்பட்ட 5 பொலிஸாரும் நேற்று புதன்கிழமை சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன

சம்பவம் தொடர்பாக விசாரணை செய்யும் யாழ்ப்பாணம் சி.ஜ.டியினர் மற்றும் தடயவியல் பொலிஸார் மாணவர்கள் இறந்து விழுந்து கிடந்த இடத்திலிருந்து 150 மீற்றர் தூரத்தில் துப்பாக்கி தோட்டாவின் வெற்றுக்கோது ஒன்றை மீட்டனர்.

சம்பவ இடத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி செல்லும் பாதையில் 150 மீற்றர் தூரத்தில் வீதியோரத்தில் இருந்த புற்களுக்குள் இருந்து குறித்த துப்பாக்கி ரவை வெற்றுக்கோது மீட்கப்பட்டுள்ளது.

மாணவர்களைச் சுட்ட பொலிஸ் உத்தியோகத்தர் சுட்ட இடத்தினை அடையாளம் காட்டியபின்னரே துப்பாக்கி வெற்று ரவை மீட்கப்பட்டுள்ளது.

விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் குறித்த 5 பொலிஸாரும் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட வெற்று துப்பாக்கி ரவைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

யாழ்.பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் மூன்றாம் வருடத்தில் கல்வி கற்ற மாணவர்களான 24 வயதுடைய விஜயகுமார் சுலக்ஸன் மற்றும் 23 வயதான நடராசா கஜன் ஆகியோர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட னர்.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்


Add new comment

Or log in with...