மூடப்பட்ட ஊவா பல்கலை நாளை திறப்பு | தினகரன்

மூடப்பட்ட ஊவா பல்கலை நாளை திறப்பு

 

றிஸ்வான் சேகு முகைதீன்

வரட்சி காரணமாக ஏற்பட்ட நீர்ப்பற்றாக்குறை நீங்கியதை அடுத்து, தற்காலிகமாக மூடப்பட்டிருந்த ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் நாளை (26) திறக்கப்படவுள்ளது.

நாளைய தினம் (26) பதுளையிலுள்ள ஊவா வெல்லஸ்ஸ பல்கலையின் அனைத்து பீடங்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என, பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் காமினி சந்திரசேன தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் தங்கியிருந்த பல்கலைக்கழகத்தின் விடுதியை அண்டியுள்ள பகுதியில் ஏற்பட்ட வரட்சி மற்றும் நீர்த்தட்டுப்பாடு காரணமாக, அவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டதோடு, கடந்த ஒக்டோபர் 12 ஆம் திகதி பல்கலைக்கழகம் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தற்போது பெய்து வரும் மழை காரணமாக, வரட்சி நீங்கியதை அடுத்து, மீண்டும் கல்வி நடவடிக்கைகளை தொடருவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவித்த உபவேந்தர், நாளைய தினம் (26) சகல மாணவர்களையும் கல்வி நடவடிக்கைகளுக்காக பல்கலைக்கழகத்திற்கு வருமாறு அறிவித்தல் விடுத்துள்ளார்.

 


Add new comment

Or log in with...