விபத்து; ஒருவர் பலி; பாலித ரங்கே பண்டாரவின் மகன் கைது | தினகரன்


விபத்து; ஒருவர் பலி; பாலித ரங்கே பண்டாரவின் மகன் கைது

 

றிஸ்வான் சேகு முகைதீன்

நேற்று (24) இரவு ஆனமடுவவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் இராஜங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டாரவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விபத்திற்கு தானே காரணம் என தெரிவித்து சரணடைந்த மற்றொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

ஆனமடுவவில் இடம்பெற்ற இவ்வாகன விபத்தில் ஆனமடுவ நகரிலுள்ள விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்த 42 வயதான நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தனது பணி முடிந்து மிதி வண்டியில் பயணித்து கொண்டிருந்த போது, அமைச்சரின் மகனின் ஜீப் வண்டி மோதியதில் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மேலும், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஆனமடுவ பொலிசார் தெரிவித்தனர்.

 


Add new comment

Or log in with...