"பட்ஜட்" முற்கூட்டிய ஒதுக்கீடு; பாதுகாப்புக்கு ரூ. 28 ஆயிரம் கோடி

 

றிஸ்வான் சேகு முகைதீன்

2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட முற்கூட்டிய ஒதுக்கீடு தொடர்பான சட்டமூலம் இன்று (20) பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இன்று (20) காலை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் குறித்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த வகையில், எதிர்வரும் ஆண்டிற்கான அரசாங்கத்தின் செலவீனம் சுமார் ரூபா 182,400 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த ஒதுக்கீட்டில் பாதுகாப்பிற்கே அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு, அது ரூபா 28,344 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.

 

விபரம்

  • பாதுகாப்பு அமைச்சு - ரூபா 28,344 கோடி
  • உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலை அமைச்சு - ரூபா 16,340
  • சுகாதார அமைச்சு - ரூபா 16,094 கோடி
  • கல்வி - ரூபா 7,694 கோடி

இதேவேளை, எதிர்வரும் வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம் நவம்பர் 10 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதோடு, வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு தினமாக டிசம்பர் 10 ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐ.தே.க. மற்றும் ஶ்ரீ.ல.சு.க. இணைந்து குறித்த வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று (20) தெரிவித்திருந்தார்.

மேலும், திருத்தப்பட்ட வற் (VAT) வரி தொடர்பான சட்டமூலம் இம்மாதம் 26 ஆம் திகதி பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 


Add new comment

Or log in with...