சவூதி அரேபிய இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

 

மூன்று ஆண்டுகளுக்கு முன் வாக்குவாதத்தில் தனது நண்பர் ஒருவரை சுட்டுக் கொன்ற சவூதி அரேபிய இளவரசர் ஒருவருக்கு தலைநகர் ரியாதில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இளவரசர் துர்கி பின் சவூத் அல் கபீருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சவூதி நிர்வாகம் குறிப்பிட்டபோதும், எவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை. சவூதியில் வழக்கமாக தலை துண்டித்தே மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

இளவரசர் இந்த ஆண்டில் சவூதியில் மரண தண்டனைக்கு உள்ளாகும் 134 ஆவது நபர் ஆவார். எவ்வாறாயினும் சவூதியின் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மரண தண்டனைக்கு உள்ளாவது மிக அரிதானதாக பார்க்கப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நஷ்ஈட்டு இரத்தப் பணத்தை பெற மறுத்ததை அடுத்தே இளவரசரின் மரணதண்டனை உறுதியாகியுள்ளது.

1975இல் தனது மாமனாரான மன்னர் பைசலை கொலை செய்த பைஸல் பின் முசைத்திற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதே அரச குடும்பத்தில் இடம்பெற்ற பிரபலமாக மரண தண்டனையாகும்.

சவூதியின் அரச குடும்பம் பல அயிரம் அங்கத்தவர்களைக் கொண்டதாகும். 


Add new comment

Or log in with...