லசந்தவின் கொலையாளி என தெரிவித்தவரின் உடல் மீள தோண்டி எடுப்பு | தினகரன்


லசந்தவின் கொலையாளி என தெரிவித்தவரின் உடல் மீள தோண்டி எடுப்பு

 

றிஸ்வான் சேகு முகைதீன்

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலையை தானே மேற்கொண்டதாக தெரிவித்து தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படும் ஓய்வு பெற்ற இராணுவ புலனாய்வு அதிகாரியின் உடல் இன்று (19) தோண்டி எடுக்கப்பட்டது.

அவரது கைவிரல் அடையாளத்தை எடுப்பதற்கு தவறியமையினால், கேகாலை நீதவான் முன்னிலையில் குறித்த உடலை மீள தோண்டி எடுக்கப்பட்டது.

கடந்த ஒக்டோபர் 14 ஆம் திகதி தற்கொலை செய்த மேஜர் ஐ.ஜி. ஜயமான்னவின் (52) உடலே இவ்வாறு இன்று தோண்டி தோண்டி எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நபர் தற்கொலை செய்துகொண்டபோது, அவர் கைப்பட எழுதியதாக தெரிவிக்கப்படும் கடிதத்தில், தானே லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்ததாக எழுதியிருந்ததோடு, குறித்த கொலை விசாரணை தொடர்பில் கைதாகியுள்ள தனது நண்பர் மலிந்த உதலாகமவுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயினும் குறித்த நபரின் கைவிரல் அடையாளம், லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டபோது பெறப்பட்ட கைவிரல் அடையாளங்களுடன் ஒத்துப்போகின்றதா என்பதனை உறுதிப்படுத்தும் பொருட்டு அவரது கைவிரல் அடையாளத்தை பெறுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...