ரூ.1,000 கோரி தொடரும் ஆர்பாட்டம்; இன்று ஒப்பந்தம் கைச்சாத்து

 

ஆயிரம் ரூபா சம்பளம், 300 நாட்கள் வேலை நாட்கள், நிலுவை சம்பளம் ஆகியன வழங்க வேண்டும் என கோரி, அக்கரபத்தனை பெல்மோரல், கிரன்லி, கிலஸ்டல் ஆகிய தோட்ட தொழிலாளர்கள் இன்று (18) தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

இதில் 800 இற்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் பெல்மோரல் கொழுந்து நிறுவை செய்யும் இடத்திலிருந்து பேரணியாக தோட்ட தொழிற்சாலை வரை சென்றனர்.

அங்கு சென்ற ஆர்ப்பாட்டகாரர்கள் தொழிற்சாலைக்கு முன்பு தரையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இவர்கள் உருவ பொம்மைகளை எரித்தும், டயர்களை எரித்தும், ஒப்பாரி வைத்தும் உடனடியாக கூட்டு ஒப்பந்தத்தினை முடித்து சம்பளம் வழங்க வேண்டும் எனவும் தமக்கு வழங்க வேண்டிய ஏனைய கொடுப்பனவுகளையும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந் நிலையில் இன்று (18) கொழும்பில், தோட்டத் தொழிலாளர் சம்பளம் தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ள நிலையில், பெருளாதார ரீதியில் நெருக்கடியில் இருக்கும் எமக்கு ரூபா 730 சம்பளம் போதாது, ரூபா 1,000 சம்பளம் வேண்டும் என கோரி டிக்கோயாவில் இன்று (18) காலை 11 மணியளவில்  தொழிலாளர்களினல் ஆர்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பளவுயர்வு பேச்சுவார்த்தை 18 மாத கலமாக இழுபறியில் இருந்து வந்த நிலையில், இன்று (18) முதலாளாளிமார் சம்மேளனமும், கூட்டு தொழிற்சங்கங்களும் கூட்டு உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டு, ரூபா 730 அடிப்படை சம்பளத்திற்கு கைச்சாத்திடவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

டிக்கோயா தரவலை பிரதேசத்தை சேர்ந்த  7 தோட்டங்களை கொண்ட  தொழிலாளர்கள் தரவளையிலிருந்து ஊர்வலமாக டிக்கோயா நகரிற்கு பதாதைகள் ஏந்தியவாறு டிக்கோயா சந்ததியினூடாக ஹட்டன் பிதான பதையின் பெருந்தோட்ட களனிவெளி கம்பனியின் காரியாலயம் வரை பேரணியாக வந்து   ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் 

நீண்டகாலமாக இழுபறி நிலையிலிருந்த சம்பள பேச்சுவாத்தையில் இணக்கப்பாடு எட்டாத நிலையில் ரூபா 1,000 சம்பளம் கோரி மலையகம் தழுவிய போரட்டத்தை தொழிலாளர்கள் முன்னெடுத்தனர்.

இப்போராட்டத்திற்கு ஆதரவு நல்கும் வகையில் கொழூம்பு யாழ் வவுனியா மட்டக்களப்பு எனநாடுதழுவீய ரீதியில் கவணயீர்ப்பு போராட்டங்கள் நடைபெறுகின்றது  இவற்றோடு யாழ் பல்கலை மாணவர்களும் பத்தனை ஸ்ரீ பாத காகல்வியற் கல்லூரி ஆசிரியபயிலுனர்களும் ஆதரவு போராட்டங்களை முன்னெடுத்தனர் 

பொருளாதார நெருக்கடியில் வாழும் எமக்கு ரூபா 730 போதாது. ரூபா 1,000 சம்பளத்தை வழங்க கம்பனிகளும் தொழிற்சங்கங்களும் இணங்க வேண்டும் என கோரியே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சுமார் ஒரு மணித்தியாலங்கள் வரை பதாதைகள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்ட பின் ஆர்பட்டகாரர்கள் கலைந்து சென்றனர்.

(ஹட்டன் சுழற்சி நிருபர் - கே. கிஷாந்தன், நோட்டன் பிரிட்ஜ் நிருபர் - மு.இராமசந்திரன்)

 


Add new comment

Or log in with...