48 மருந்து பொருட்களின் விலை சூத்திர வர்த்தமானி 21 இல் வெளியீடு

 

நாட்டின் இலவச சுகாதார சேவையை மேலும் மேம்படுத்தும் நோக்கில் அதிகளவில் பயன்படுத்தப்படும் 48 மருந்து பொருட்களுக்கான விலைச் சூத்திர அதி விஷேட வர்த்தமானி எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெளியிடப்படுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹீபால நேற்று(17) தெரிவித்தார்.

இந்த 48 மருந்து பொருட்களுக்கான உச்ச சில்லறை விலை அடங்கிய வர்த்தமானி வரைவு நேற்று சட்ட வரைஞர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அவர்கள் நாளை மறுதினம் அதனை எமக்கு கையளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அவ்வர்த்தமானி கிடைக்கப்பெற்றதும் மறுநாளே அதி விஷேட வர்த்தமானியாக வெளியிடப்படும் எனவும் அவர் கூறினார்.

இவ்விலைச் சூத்திரத்தின் அடிப்படையில் குறித்த மருந்துப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றதா? என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பு சுகாதார திணைக்களத்திற்கும், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கும் வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர், விலைச்சூத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மருந்துப் பொருளின் விலை சந்தையில் குறைவாகக் காணப்படுமாயின் அதேவிலைக்கே தொடர்ந்தும் அம்மருந்து பொருள் விற்பனை செய்யப்பட வேண்டும் என்பது வர்த்தமானி ஊடாக வலியுறுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

மருந்துப் பொருட்களுக்கான விலைச் சூத்திரம் குறித்த செய்தியாளர் மாநாடு அவரது அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இச்செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் டொக்டர் பாலித மஹீபால மேலும் குறிப்பிட்டதாவது: நாட்டு மக்களின் நலன் கருதி அதி-களவில் பயன்படுத்தப்படும் 48 மருந்துப் பொருட்களுக்கான விலைச்சூத்திரத்தை உள்ளடக்கிய வர்த்தமானியின் வரைவு சட்ட வரைஞர் திணைக்களத்திற்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது-. அதனைஅத்திணைக்களம் எதிர்வரும் வியாழக்கிழமை எமக்கு வழங்குவதாக உறுதியளித்துள்ளது. இவ்வர்த்தமானி கிடைக்கப் பெற்றதும் மறுநாளே அதி விஷேட வர்த்தமானியாக வெளியிடப்படும்.

நாட்டில் அதிகளவில் பயன்படுத்தப்படும் 48 மருந்து பொருட்களுக்கு முதற்கட்டமாக உச்ச மட்ட சில்லறை விலை இவ்வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அறிவிக்கபடவுள்ளது. இவற்றில் நீரிழிவு, இருதய நோய்கள், கொலஸ்ரோல் உள்ளிட்ட பல நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மரு-ந்துப் பொருட்களும் அடங்கியுள்ளன. இத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடு-க்கப்படும்.

இவ்விலைக்குறைப்பு சூத்திரம் உத்தியோகபூர்வமாக நடைமுறைக்குவரும் நாளில் ஒரு மரு-ந்து பொருளின் விலை வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட விலையை விடவும் குறைவாகக் காணப்படுமாயின் அம்மருந்துக்கான விலையை வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள விலைக்கு அதிகரிக்க முடியாது. அதேநேரம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள விலையை விடவும் அதிகரித்து காணப்படும் மரு-ந்து பொருட்களின் விலைகள் வர்த்தமானி அறிவிப்பு விலைக்கேற்ப குறைக்கப்பட வேண்டும்.

இவ்விலைச் சூத்திரம் அறிவிக்கப்பட்ட பின்னர் சில கம்பனிகள் குறித்த மரு-ந்து பொருட்களில் செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்த முயற்சிக்கலாம். அதனால் அரசாங்க வைத்தியசாலைகளுக்கான மருந்துப் பொருட்கள் விநியோகத்திலோ அல்லது ஒசுசல மருந்தகங்களிலோ குறித்த மருந்து பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்பட இடமளிக்கக் கூடாது என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதனடிப்படையில் இவ்வர்த்தமானியில் அறிவிக்கப்படும் மரு-ந்துப் பொருட்களை மூன்று மாதங்களுக்கு தேவையான அளவு கையிருப்பில் வைத்திருப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மருந்து பொருட்கள் விநியோகப் பிரிவுக்கும், இம்மருந்துப் பொருட்களுக்கு அரசாங்க ஒசுசல விற்பனை நிலையங்களில் தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்காதபடி அவற்றைத் தொடராக விநியோகிக்கத் தயாராக இருக்குமாறு அரசாங்க மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தி-ற்கும் அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும் இவ்விலைச் சூத்திரம் குறித்து மக்களை அறிவூட்டுவதற்கும் உத்தேசித்துள்ளோம். அத்தோடு இவ்விலைச் சூத்திரத்தின் அடிப்படையில் மருந்துப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றதா என்பதைக் கண்காணிக்கும் அதிகாரம் சுகாதாரத் திணைக்களத்திற்கும், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நாடெங்கிலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இவ்விலைச்சூத்திரத்திற்கு முரணாக குறித்த மருந்துப் பொருட்களை அதிகரி-த்த விலைக்கு விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் தேசிய மருந்து பொருட்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தலைவர் பேராசியர் அசித டி சில்வா, முகாமைத்துவப் பணிப்பாளர் டொக்டர் கமல் ஜயசிங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மர்லின் மரிக்கார் 

 


Add new comment

Or log in with...