கைதாகி சிறை (வைத்தியசாலை) யிலுள்ள பிரபலங்கள்

 

றிஸ்வான் சேகு முகைதீன்

பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் சந்தேகத்தின் பேரில் கைதாகி சிறையில் வைக்கப்படும் அரசியல்வாதிகள் அல்லது அவர்களது உறவினர்கள் கைதாகி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

அந்த வகையில் அவ்வாறு சிறை சென்று வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் பிரபலங்கள் சிலர், தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1. துமிந்த சில்வா - ஞாபகசக்தி குறைவடைதல், நுரையீரல் பாதிப்பு நோயால் அவதியுறுவதாக தெரிவிக்கப்படுவதோடு, சில வாரங்களுக்கு முன்னர் அதிக காய்ச்சல் காரணமாக, வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

குற்றம்: பாரத லக்‌ஷ்மன் பிரேமசந்திர கொலை தொடர்பில் மரண தண்டனை.

2. ஜயந்த சமரவீர எம்.பி. - அதிக இரத்த அழுத்தம், இருதய பலவீனம் ஆகிய பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதாக தெரிவித்து, சிறையில் அடைக்கப்பட்ட நாளன்றே, வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இவர், தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றம்: ஜனாதிபதி செயலக வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தினார்.

3. சரத் வீரவங்ச - அதிக இரத்த அழுத்தம், இருதய பலவீனம் ஆகிய பிரச்சினைகளால் அவதியுறுவதாக தெரிவித்து வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரான விமல் வீரவங்சவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றம்: ஜனாதிபதி செயலக வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தினார்.

4. சானுக ரத்வத்த - அதிக கொலஸ்ட்ரோல், மன அழுத்தம் காரணமாக வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இவர் ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினரான லொஹான் ரத்வத்தவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றம்: ரூபா 4,200 மில்லியன் பண மோசடி.

குறித்த நால்வரும் சிறைச்சாலை வைத்தியசாலை வைத்தியசர்களின் ஆலோசனைக்கமையவே சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

 


Add new comment

Or log in with...