குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார் ரம்புக்வெல்ல

 

றிஸ்வான் சேகு முகைதீன்

தன் மீது சுமத்தப்பட்ட 5 குற்றச்சாட்டுகளையும் ஏற்றுக் கொண்ட ரமித் ரம்புக்வெல்லவுக்கு ரூபா 29 ஆயிரம் அபராதம் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னாள் கிரிக்கெட் வீரரும் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகனுமான ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிராக அவதானமின்றி வாகனம் செலுத்தியமை, விபத்தை தவிர்க்காமை, போதையில் வாகனம் செலுத்தியமை, போலியான இலக்கத் தகட்டைக் கொண்ட வாகனத்தை ஓட்டிச் சென்றமை, மற்றுமொருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தை செலுத்தியமை உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கறுவாத்தோட்ட பொலிஸாரால் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வழக்கு இன்றைய தினம் (11) கொழும்பு போக்வரத்து மேலதிக நீதவான் சந்தன கலங்சூரிய முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ரமித் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டார்.

இதனை அடுத்து ரூபா 29 ஆயிரம் அபராதம் விதித்த நீதவான், தற்காலிகமாக தடை செய்யப்பட்ட அவரது வாகன அனுமதிப்பத்திரத்தையும் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.

 


Add new comment

Or log in with...