மட்டு.மாவட்டத்தில் 150 க்கு அதிகமான குளங்கள் வற்றின

 

தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வரட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 150 இற்கும் அதிகமான சிறிய நீர்ப்பாசனக் குளங்கள் வற்றிவிட்டதாக கமநல சேவைகள் அபிவிருத்தி திணைக்கள மாவட்ட பிரதி ஆணையாளர் எஸ். சிவலிங்கம் தெரிவித்தார்.

இம்மாவட்டத்தில் 386 சிறிய நீர்ப்பாசனக் குளங்கள் உள்ளன. இவற்றுள் 212 குளங்களிலிருந்து பாசன வசதியை பெறமுடியும். இவற்றுள் 150 குளங்கள் நீரின்றி வற்றிப் போயுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இம்மாவட்டத்திலுள்ள 13 நடுத்தர நீர்ப்பாசனக் குளங்களில் அதிகமான குளங்கள் வற்றிவிட்டதாக மாகாண நீர்பாசனத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் பி. வடிவேல் தெரிவிததர்.

இதேவேளை பெரிய நீர்ப்பாசனக் குளங்களான உன்னிச்சைஇ உறுகாமம், நவகிரி, வாகனேரி குளங்களின் நீர்மட்டமும் குறைவடைந்து வருவதாக தெரிவருகிறது.

(மட்டக்களப்பு குறூப் நிருபர் - ஜௌபர்கான்)

 


Add new comment

Or log in with...