வாகனத்தை ஒப்படைக்கவில்லை பௌசிக்கு அழைப்பாணை

 

றிஸ்வான் சேகு முகைதீன்

கடந்த ஆட்சியின்போது வழங்கப்பட்ட வாகனத்தை வழங்காது முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசிக்கு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த அரசில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக அவர் இருந்தபோது, அவசர அனர்த்த நிலைமைகள் தொடர்பில் பயன்படுத்துவதற்காக நெதர்லாந்து அரசினால் வழங்கப்பட்ட ரூபா ஒரு கோடி 90 இலட்சம் (ரூபா 19.5 மில்லியன்) பெறுமதியான ஜீப் வண்டியை 2011 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை தனது தனிப்பட்ட பயன்பாட்டிற்கு எடுத்துக் கொண்டதாக தெரிவித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த விடயம் தொடர்பான வழக்கு தொடர்பில் இன்று (07) கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய இராஜாங்க அமைச்சர் பெள்சியை எதிர்வரும் நவம்பர் 28 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுத்துள்ளார்.

 


Add new comment

Or log in with...