நஷ்டம்; மிஹின் லங்கா, ஶ்ரீலங்கனுடன் இணைப்பு | தினகரன்


நஷ்டம்; மிஹின் லங்கா, ஶ்ரீலங்கனுடன் இணைப்பு

 

றிஸ்வான் சேகு முகைதீன்

மிஹின் லங்கா விமான சேவை நிறுவனத்தை, ஶ்ரீலங்கன் விமானசேவை நிறுவனத்துடன் இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இம்மாதம் (ஒக்டோபர்) 30 ஆம் திகதி முதல், மிஹின் லங்கா விமானசேவைகள் யாவும் இலங்கை விமான சேவை ஊடாக இடம்பெறும் என ஶ்ரீலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.

குறைந்த கட்டண அடிப்படையிலான சேவையை அடிப்படையாகக் கொண்டு கடந்த 2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மிஹின் லங்கா விமானசேவை, பஹ்ரைன், டாக்கா, கயா, மதுரை, மஸ்கட், சீசெல்ஸ் போன்ற இடங்களுக்கு தனது சேவைகளை மேற்கொண்டு வருகின்றது.

பல்வேறு விமானசேவைகளுடன் காணப்படும் போட்டியை ஈடு செய்ய முடியாமை காரணமாக ஏற்பட்டுள்ள நஷ்டம் காரணமாக தனித்து இயங்க முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதனால், தேசிய விமான சேவைகளை திறன்பட செயற்படுத்துதல், அதன் தரத்தை உயர்த்துதல், மேலதிக செலவைக் குறைத்தல் தொடர்பான வேலைத் திட்டத்தின் அடிப்படையில், ஶ்ரீலங்கன் விமான சேவையுடன், மிஹின் லங்கா விமான சேவை இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


Add new comment

Or log in with...