விக்னேஸ்வரனை பதவி விலக கோரி ஆர்ப்பாட்டம்

 

றிஸ்வான் சேகு முகைதீன்

வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பதவி விலக வேண்டும் என தெரிவித்து இன்று (30) வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்று வருகின்றது.

ராவணா பலய அமைப்பின் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் மற்றும் பொது பல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் ஆகியோரின் ஏற்பாட்டிலேயே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் வாழ்ந்த சிங்களவர்களை மீள்குடியேற்ற கூடாது எனவும், வடக்கின் மிகப் பழைமை வாய்ந்த பௌத்த விகாரையை கட்டக்கூடாது எனவும் தெரிவித்த விக்னேஸ்வரன், முதலமைச்சு பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், அரசியலமைப்பின் அடிப்படையில், அவர் கைது செய்யப்படக்கூடிய குற்றத்தை புரிந்துள்ளதாக தெரிவித்தனர்.

"உதுர ரகின ரட்ட சுரகின வன்னி பலவேகய" (வடக்கை பாதுகாக்கும், நாட்டை காக்கும் வன்னி படையணி) எனும் பெயரைக் கொண்ட குறித்த ஆர்ப்பாட்டம் தற்போது வவுனியா குளத்தின் அருகில் இடம்பெற்று வருவதோடு, அங்கிருந்து வவுனியா மாவட்ட ஆணையாளரின் அலுவலகத்திற்குச் சென்று, மாவட்ட அதிபரிடம் மகஜர் ஒன்றை கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளதாகவும், ஆர்ப்பாட்டத்தை பார்வையிட அப்பிரதேச தமிழ் மக்கள் வீதியெங்கும் குழுமியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


Add new comment

Or log in with...