யாழ். துரையப்பா தீப மேடை நிறைவுக் கட்டத்தில் | தினகரன்

யாழ். துரையப்பா தீப மேடை நிறைவுக் கட்டத்தில்

 

யாழ்.துரையப்பா விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டு வரும் தேசிய விளையாட்டு விழாவின் தீபம் ஏற்றும் மேடை நிறைவுக்கட்டதை எட்டியுள்ளது. 

நாளைய தினம் (29)  தேசிய விளையாட்டு விழா ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று (28) இரவு இதன் வேலைகள் நிறைவுபெறும் என கட்டுமானப் பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

துரையப்பா விளையாட்டு மைதானம் சர்வதேச தரத்திற்கு அமைவாக இந்திய அரசின் உதவியுடன் புனரமைக்கப்பட்டு ஜூன் மாதம் 18 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான்)

 

 

 


Add new comment

Or log in with...